ராவணன் மிகச் சிறந்த சிவபக்தன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிறந்த சிவபக்தனான ராவணன், ராமன் கையால் மாண்டதற்கு அவன் செய்த சிவ அபராதமும் ஒரு முக்கியக் காரணமாகும் என்பர் ஆன்மிகச் சிந்தனையாளர்கள். ராவணன் சீதையைக் கவர்ந்து கொண்டு ஆகாய மார்க்கமாக விரைந்து சென்று கொண்டிருந்தான். அதை கழுகரசனான ஜடாயு பார்த்துவிட்டான். அவரும் தசரத மன்னனும் இணைபிரியா நண்பர்கள். ஆகவே ராவணனது விமானத்தை இடை மறித்தான் ஜடாயு. சீதையை… Continue Reading ராவணன் மிகச் சிறந்த சிவபக்தன்

உபநிடதங்கள்அல்லது உபநிஷத்துக்கள் (Upanaishads) பண்டைய இந்திய தத்துவ இலக்கியமாகும். இந்து சமயத்தினரின் ஆதார நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது. வேதங்களில் இவை இறுதியாக வந்தவையாகும் எனவே இவை வேதாந்தம் எனவும் கூறப்படுகின்றன. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில் பெரும்பாலும் யோகம், தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப் படுகிறது. பெரும்பாலும் குரு – சீடன் இடையே நடைபெறும் உரையாடலாக இவை அமைந்துள்ளன. இந்து சமய நூல்களில் இவை மிக உன்னதமான மதிப்பு பெற்றவை.… Continue Reading உபநிஷத்துக்கள்

ஒருவன், ஒரு பெருங்காட்டுக்குள் நுழைந்தான். எவராலும் சுலபமாக நுழையமுடியாத காடு அது. அங்கு போன அந்த மனிதன், நன்றாகச் சுற்றுமுற்றும் பார்த்தான். சிங்கம், புலி, கரடி முதலான துஷ்ட மிருகங்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. ஒரே கூச்சல். அந்த மிருகங்களின் நடமாட்டத்தையும் கூச்சலையும் கண்டு, மனிதன் மிகவும் பயந்துபோய் அங்குமிங்குமாக ஓடித் தப்பிக்க முயற்சி செய்தான். அப்போது மிகவும் கோரமான அவலட்சணமான – யாவரும் வெறுக்கக்கூடிய பெண் ஒருத்தி ஓடி… Continue Reading விதுர நீதி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு கோபுர உச்சியில் வெள்ளையம்மா நிற்க, அந்நியப்படைகள் அவளை நோக்கி வர, “ரங்கா! சேவை செய்ய பாக்கியம் அளித்த ரங்கநாதா! உன் திருவடியைச் சேர்கிறேன்‘ என கீழே குதித்து ரத்த வெள்ளத்தில் மிதந்தாள். யார் இவள்? ஸ்ரீரங்கம் கோயிலின் தேவதாசி. கடவுளின் சேவைக்காக வாழ்வை அர்ப்பணித்தவள். கோயிலை அந்நியர்கள் ஆக்கிரமித்திருந்த காலம் அது. அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடித்து, தங்களது நாட்டுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர்.… Continue Reading வெள்ளை கோபுரம்

எ ன் வீடு இருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில் ஓரமாக இருந்தது அந்த மரம்! என் அலுவலக நண்பர் விக்ரம் தினம் காரில் அந்த வழியாக வருவார். ஓசி லிஃப்ட் தருவார். அவருக்காக மர நிழலில் காத்திருந்தபோது, செருப்பு தைக்கும் தொழிலாளி எதிர்ச்சாரி டீக்கடையிலிருந்து கையில் ஒரு டீ கிளாஸுடன் சாலையைக் கடந்து வந்துகொண்டு இருந்தார். மரத்தடியில் சுருண்டு படுத்திருந்த அவர் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை போலும்… திடீரென்று… Continue Reading இளம் பெண் – கிழவன்

நமக்கு ஏன் முற்பிறவி நினைவு வருவதில்லை? முன்ஜென்மம் உண்மையா? 1.நாம் குழந்தைகளாக இருந்தபோது என்ன நடந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது.? 2.நினைவு தான் ஆதாரம் என்றால் நம் நினைவில் இல்லாத நாட்கள் நாம் வாழாத நாட்கள் என்று ஆகிவிடும். சிலர் ஹோமாவிற்கு சென்றுவிடுகிறார்கள்.எதுவும் நினைவில் இருப்பதில்லை . அவர்கள் நினைவில் இல்லாத காலங்கள் அவர் வாழாத காலம் என்று சொல்ல முடியுமா? 3.முற்பிறவியில் உள்ள மூளை… Continue Reading முன்ஜென்மம் உண்மையா?

அருணந்தி சிவாச்சாரியார் இவர், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பிய பெரியார்களுள் ஒருவர். இவர் சைவ சமயத்தை சேர்ந்தவர்களால், சந்தான குரவர்களுள் ஒருவராக, மெய்கண்ட தேவருக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார். இவர் சிவஞான சித்தியார் எனும் புகழ் பெற்ற சைவ சித்தாந்த நூலை இயற்றியவர். சைவ சித்தாந்த நூல்களுள் தலையாயதாகக் கருதப்படும் சிவஞான போதத்தை இயற்றியவரான மெய்கண்ட தேவரை இவர் ஆசிரியராகக் கொண்டார். இவர் தமிழ் நாட்டில் திருத்துறையூர் என்னும்… Continue Reading அருணாசல கவிராயர்

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-19 சுவாமி பாஸ்கரானந்தர் இந்து சமுதாயத்தில் குழந்தைகள் நடத்தப்படும் விதம்- ஒரு நல்ல இந்து குடும்பத்தில் தாத்தா, பாட்டி, சித்தப்பா, மாமா, அத்தை போன்ற உறவினர்களுடன் வளரும் குழந்தைகளுக்குப் பல அனுகூலங்கள் உண்டு. அம்மாதிரி வளரும் குழந்தைகளுக்குச் சிறந்த அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். காப்பகங்களில் விடப்படும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்பவர்கள் பணத்திற்காக வேலை செய்பவர்கள். எனவே வீட்டில் பெரியவர்களுடன் வளரும் குழந்தைகள் அதிஷ்டசாலிகள்.. காப்பகங்களில் குழந்தைகளுக்கு அத்தகைய… Continue Reading இந்து சமுதாயத்தில் குழந்தைகள் நடத்தப்படும் விதம்

ஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது. அவள் பயந்து அருகிலுள்ள வீட்டில் தஞ்சம் புகுகிறாள். மறுநாள் அதே தாய் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருக்கிறாள். திடீரென ஒரு சிங்கம் அவள் குழந்தையின் மீது பாய்கிறது. அவள் அப்போது என்ன செய்வாள்? சிங்கத்தின் வாயில் தன்னை அர்ப்பணித்தாவது அவள் குழந்தையைக் காப்பாற்றுவாள் அல்லவா? இவ்வுதாரணத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் உண்மையான அன்பின்… Continue Reading அன்பு பயம் அறியாதது

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-25 சுவாமி பாஸ்கரானந்தர் வட மொழியில் கர்ம வாதம் என்று சொல்லப்படும் செயலும் அதன் விளைவும் என்பதை இந்து மதம் நம்புகிறது. கர்ம என்றால் செயல் என்று பொருள்.சில சமயங்களில் செயலின் விளைவையும் குறிக்கும்.இதன் படி நற்செயல்களினால் நன்மையும் தீய செயல்களினால் தீமையும் விளையும் என்பதே அறியப்படுவது. செயல்களினால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளுமே “கர்ம பலம்” என்று வடமொழியில் சொல்லப்படுகிறது.ஒருவன் செய்யும் நல்ல செயல்கள் அவனுக்கு மகிழ்ச்சியைத்… Continue Reading செயலின் கோட்பாடு- கர்மா தியரி-விதி