Tamil

die älteste lebendige Sprache der Welt

அதிர்ச்சிதரும்ஆய்வுமுடிவுகள் !*

டிவி நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரிகள், உரக்கக் கத்திப் பேசுதல், சோக இசைகள் மற்றும்
சாவு மேளதாளம் இசைகள் ,

இவையெல்லாம்
உங்கள் வீட்டில் இருக்கும்
லக்ஷ்மி கடாக்ஷத்தைச் சீர்குலைத்துக் கெடுத்து விடும்.

இதனால் அபசகுனமான
நிகழ்ச்சிகளின் காட்சிகள் டிவிக்குள் நடந்தாலும் அதன் ஒளி ஒலி அதிர்வுகளின் நிகழ்வுகள் நமது வீட்டிற்குள்ளேயேநடப்பதால்
குடும்பத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் என்பது அசைக்க முடியாத ஆன்மீக நம்பிக்கையாளர்களின் ஆய்வு ஆகும்.

இதனால் பல நோய்கள் வரலாம்
வீட்டில் பணம் தாங்காமல் போகலாம்,
வீண் செலவுகள் ஏற்படலாம்
தொழில் நஷ்டம் ஏற்படலாம்,
என்று ,

இப்படிப்பட்ட
அதிர்ச்சி தரும் ஆன்மீக ஆய்வு முடிவுகள் ஒரு பக்கம் எச்சரிக்கை செய்கிறது..

அதே சமயம் ஆன்மீக நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் அதிர்ச்சி தரும் மருத்துவ ஆராய்ச்சி ஆய்வு முடிவுகள் மிகவும் அபாயகரமானதாக உள்ளது.

ஆமாம்…

உங்கள் உடல் நலத்தையும் சீரழித்துவிடும்
அதிர்ச்சி ரிப்போர்ட்…

இதனால் கண் பார்வை கோளாறில் ஆரம்பித்து மன இறுக்கம் , மன அழுத்தம்
மன நோய் வந்து… உடல் எடை அதிகரித்து….

இதன் தொடர்ச்சியாக…
சர்க்கரை வியாதி
மாரடைப்பு , இருதயக் கோளாறு,
இரத்த அழுத்தம், கழுத்து எலும்புத் தேய்மானம் , தலைசுற்றல் , தலைவலி , மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்…

இதற்கு எல்லாம்
முக்கியமான காரணம்….
பிறரை எப்படிக் கெடுப்பது, அழிப்பது, துன்புறுத்துவது ,

குடும்பத்தினருக்குள்
மாமியார் மருமகள் சண்டை,
அண்ணன் தம்பி சண்டை
சந்தேகப்படுவது,
சகுனி வேலை பார்ப்பது,
எல்லாம் கற்றுக் கொள்ளலாம்.

எப்படி லஞ்சம் பெறுவது ,
கற்றுக் கொள்ளலாம்

அதோடு
நேர்மையான அரசு அதிகாரிகளை
எப்படி லஞ்சம் வாங்கியதுபோல்
திட்டமிட்டு மாட்டி விடுவது
இவையும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன .

பிறர் தொழிலை எப்படிக் கெடுப்பது
என்பது எல்லாம் காண்பிக்கப்பட்டு
மக்களுக்கு பழக்குவிக்கப்படுகிறது.

இவையெல்லாம் விட
பெரிய பேரிழப்பு ….

உங்கள் அருமைக் குழந்தைகளின்
விலை மதிப்பற்ற எதிர்காலம் பாழாக்கப்படுகிறது…

இத்தனை பாதிப்புகள் தெரிந்ததும்
தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் TRP ரேட்டிங் அதிகரித்திட
சுய லாபத்துக்காக இப்படிப்பட்ட மக்களைச் சீரழிக்கும்
டிவி சீரியல்கள் தயாரிக்க முக்கியத்துவம் தருகிறது..

தயவுசெய்து மக்களே,
இது போன்ற கேவலமான நாடகங்களைப் புறக்கணியுங்கள்..

நாம் புறக்கணித்தால் தானே
TRP ரேட்டிங் குறைந்தால்
தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களை சீரழிக்கும் சீரியல்களை தானே நிறுத்தி விடுவார்கள் .

நமது செயல் மட்டும் இல்லை எண்ணங்களும் நமது கர்மா தான் .

எனவே உங்கள்
விலைமதிப்பில்லா ஓய்வு நேரத்தை
அன்பான குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள கணவன், மனைவி, பெரியவர்களோடும் சிரித்து பேசி பாசத்துடன் பழகி வாழ்க்கையை அனுபவியுங்கள்

குறைந்த நேரம் நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாருங்கள் .

மற்ற நேரங்களில்
நல்ல புத்தகங்களைப் படியுங்கள்.. .
கிடைக்க கூடிய பொன்னான நேரங்களில் பிறருக்கு நன்மை செய்யும் நல்ல காரியங்களிலும் ஈடுபடுங்கள் .

இல்லையேல் வரும் பலன்களை
நல்லதோ கெட்டதோ
நீங்கள்தான் அவற்றை டிவி பார்த்து
உருவாக்கினீர்கள் என்பதை உணர்ந்து
அனுபவிக்கத் தயாராகுங்கள்…..

அல்லதை விடுத்து நண்பர்களே நல்லதை பாருங்கள் , கேளுங்கள் பேசுங்கள், சிந்தியுங்கள் வாழ்வில் எல்லாம் நல்லதாய் நடக்கும்

வாழ்க வளமுடன் & நலமுடன்

தீதும் நன்றும் பிறர் தர வாரா
நம்மை சுற்றி நடப்பனவற்றுக்கு
நாமே பொறுப்பு……..

எண்ணம் போல் வாழ்க்கை

Next Post

Previous Post

Leave a Reply

© 2020 Tamil

Theme by Anders Norén