June 28, 2019

ஆன்மாவின் உண்மை வடிவம் என்ன?

By priyesh Prakash

ஆன்மாவின் உண்மை வடிவம் என்ன?

பதில்: ஆத்மா வேறு, பிரபஞ்சம் வேறு. பிரபஞ்சம் அழியும் பாங்குடையது. ஆத்மா அழியாதது. வீடும் வீட்டில் குடியிருக்கும் மனிதனும் வெவ்வேறானவர்கள். குடியிருக்கும் மனிதன் தன்னையும் தான் குடியிருக்கும் வீட்டையும் அறியவருகிறான். அப்படி அறியும் பாங்குடையது ஆத்மா. அது அழியாப் பொருள். ஆத்மா ஆனந்த சொரூபம். நாம் ஆத்மா என்பதற்கு அத்தாட்சி நாமே. உடலோ ஜடப்பொருள். தூங்கும்பொழுது உடல் தன்னைத்தான் அறிந்துகொள்ளுதல் இல்லை. குடியிருப்பதற்குத் தகுதியற்ற உடலை ஜீவாத்மா புறக்கணிக்கிறது. அப்பொழுது அது வெறும் சடலம். ஆகவே ஆத்மாவின் வடிவம் ஸத் சித் ஆனந்தமாம். ஜடப்பொருள் ஸத் ஆகாது. ஆகையினால் அதனிடத்து அறிவோ ஆனந்தமோ இல்லை. நான் இருக்கிறேன் என்பதை எது அறிகிறஹோ அது ஆத்மா. ஆத்மாவானது ஆணன்று, பெண்ணன்று, அலியன்று. இந்த வேறுபாடுகளனைத்தும் உடலுக்குரியவைகள். உடலைத் தான் என்று கருதுவது அக்ஞானம். விசாரித்துப் பார்த்து ஆத்மா வேறு, பிரகிருதியின் கூறாயிருக்கிற உடல் வேறு எனப் பாகுபடுத்துவது மெய்யறிவு. இந்த அறிவுக்கேற்ப வாழ்வது ஆத்ம சாதனமாகிறது.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

What is Aathma ?

Was heißt Aathma?