இது குற்றால சீசன்.. குற்றாலத்தை பற்றி பலரும் அறியாத அரிய தகவல்களை தொகுத்து தருகிறார் திருநெல்வேலி வானொலியில் பணி புரியும் ஒலிபரப்பு அலுவலர் திரு சிவா ஆனந்த கிருஷ்ணன் அவர்கள்
1.குற்றாலம் அருகில் உள்ள காசிமேஜர்புரம் Lord Casa Major என்ற ஆங்கிலேயர் நினைவாக பெயரிடப்பட்ட ஊர்
2.ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி 1811 ஆம் ஆண்டு குற்றால அருவிகளில் வரும் தண்ணீரில் உள்ள மருத்துவ குணத்தை ஆராய சிறப்பு மருத்துவ ஆய்வு குழுவை ஏற்படுத்தியது
3.மருத்துவர் White என்கிற ஆங்கிலேயர் 1835 ஆம் ஆண்டு விரிவான ஆராய்ச்சி செய்து குற்றால அருவி நீருக்கு மகத்தான மருத்துவ குணங்கள் உள்ளன என்று கண்டறிந்து ஆய்வை சமர்ப்பித்தார்
4.Dr White சுமார் 2000 மருத்துவ செடிகள் குற்றால அருவிகளை மருத்துவ குணமுள்ள நீராக மாற்றுகிறது என்று கண்டறிந்தார்
5.பேரருவி என்று சொல்லப்பட கூடிய மெயின் அருவி கேரளாவில் உள்ள பாலருவி நீரே… பாலருவியில் உற்பத்தி ஆன பிறகு தேனருவி மற்றும் செண்பகாதேவி அருவியை கடந்து மெயின் அருவியாக வீழ்கிறது
6.பழத்தோட்ட அருவி என்பது தமிழக அரசின் தோட்டகலை துறையால் நிர்வகிக்க படும் அருவி.. இங்கே தான் குற்றாலத்தில் விளையும் அரிய வகை பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது
7.1950 ஆம் ஆண்டு வரை புலி அருவிக்கு மக்கள் குளிக்க செல்வதில்லை.. திரு கரிமுத்து தியாகராஜா செட்டியார் என்பவரே புலி அருவியை பொது மக்களுக்காக ஏற்பாடு செய்தவர். இவரே அங்கு இருக்கும் புலி குகையை கட்டியவர்
8.பழைய குற்றாலம் 1960 ஆம் ஆண்டு வரை பிரபலம் அடையவில்லை… மேலும் மக்கள் குளிக்க ஏது இல்லாத அருவியாக இருந்ததை செயற்கையாக பாறைகளில் படிக்கட்டு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தவர் அப்போதைய முதல்வர் திரு காமராஜர் அவர்களே
9.இந்தியாவில் ஒரே நகரத்தில் 10 க்கும் மேற்பட்ட அருவிகள் இருப்பது குற்றாலம் மட்டுமே
10.குற்றாலத்தின் மெயின் அருவியில் உள்ள வளைவை(Arch) கட்டியது ஆங்கிலேயர்களே..