Tamil

die älteste lebendige Sprache der Welt

இன்று இருக்கும் அறிவியலை … இந்தியாவில் இருந்திருக்கின்றது

இன்று இருக்கும் அறிவியலை விட மிக மேம்பட்ட அறிவு அன்று இந்தியாவில் இருந்திருக்கின்றது ஏதோ ஒருகாலத்தில் அது தொடற்பற்று போய் மீண்டும் ஐரோப்பாவில் மலர்ந்தது என அவர்களே சொல்கின்றார்கள்

ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பையும் மகாபாரதம் மற்றும் கண்ணணோடு ஒப்பிட்டு அவர்கள் சிலாகிப்பதே வேறு ரகம்

அணுகுண்டு வெடிக்கும் பொழுது ஓப்பன் ஹைமர் எனும் யூதன் அது கீதையில் கண்ணன் சொன்ன வடிவம் என்கின்றான்

இன்றைய அணுகுண்டு அன்றைய பிரம்மாஸ்திரம் சந்தேகமில்லை ஆனால் மகாபாரதம் அதை கட்டுபடுத்தும் வித்தை அர்சுனனுக்கு தெரிகின்றது அதனால் எங்கோ ஒரு வித்தை உண்டு என நம்பிக்கையோடு ஆய்வினை தொடர்கின்றது மேற்குலகம்

பிரம்மாஸ்திரம் இப்படி என்றால் பாசுபத கனை எப்படி இருக்கும் என்கின்றது இன்னொரு ஆய்வு

கண்ணனின் சக்கராயுதம் இன்றைய ட்ரோனின் மாடல் என்கின்றது இன்னொரு ஆய்வு, கவனியுங்கள் பொருந்தும்

பார்வையிலே எரிக்கும் லேசர் போன்ற சக்தி காந்தாரிக்கு இருந்திருகின்றது, ஒளி கதிரில் ஒருவரை எரிக்கலாம் என்பதன் தத்துவம் அது

கர்னணின் பிறப்பு கிட்டதட்ட குளோனிங் மற்றும் நவீன விஞ்ஞான விஷயங்களை சொல்வதாக சொல்கின்றது மருத்துவம்

பலராமன் பிறப்பும் அதையே சொல்கின்றது

பாரதத்தை படித்த மேற்குலகம் அதன் நுட்பம் எல்லாம் இன்று கண்முன் நிற்பதை பார்த்து அதிசயிக்கின்றது

மந்திரம் சொன்னால் சில கனைகள் இயங்கும் என பாரத போர் சொல்வதை இன்று நாம் வாய்ஸ் பாஸ்வேர்ட் என்கின்றோம் என்கின்றது ஒரு ஆய்வு

இன்றைய ஏவுகனை எதிர்ப்பு ஏவுகனைகள் எல்லாம் அன்றே பாரத போரில் பயன்பட்டன, ஏவுகனை எதிர்ப்பு கனை சாத்தியம் என முதலில் சொன்னது

அர்ஜூனன் கழுத்தை குறிவைத்த நாகஸ்திரம் இன்று உலகை மிரட்டும் உயிரியல் ஆயுதத்தின் வடிவம் என்கின்றது ஒரு ஆய்வு

ஆம் விஷத்தை ஆயுதமாக்கலாம் என இன்றைய உலகின் மிரட்டலை முதலில் சொன்னது பாரதமே

விண்வெளியி ரகசியங்களை மகாபாரதம் சொல்லிதருவது போல் இன்னொரு காவியம் சொல்வதில்லை என்கின்றது இன்னொரு ஆய்வு

துரோணரும் துருபதனும் அமைத்த வியூங்களை இன்றளவும் சிலாகிக்கின்றனர் ராணுவ தளபதிகள்

பாரதத்தை யார் படிக்கின்றார்களோ இல்லையோ மிக நுட்பமாக படித்தவர்கள் இஸ்ரேலியர்

ஆம் யுத்தத்தில் மனநலமும் உற்சாகமும் முக்கியம். சோர்ந்துவிட்ட அர்ஜூனனை மனநலமாக எழவைத்த கண்ணனின் உரையே கீதை

அந்த பலமே அங்கு வெற்றியினை தீர்மானித்தது, இன்றளவும் தங்கள் வீரர்களின் மனநலத்தை காப்பதில் இஸ்ரேலின் கவனம் அதிகம்

அதே அளவு தந்திரம் எதிரியினை மனதால் குழப்புவது, அதை கண்ணன் செய்தான், இஸ்ரேல் அரபு போர்களில் அட்டகாசமாக செய்தது

பாரத போரில் பலமிக்க துரியன் படை ஒரேநேரத்தில் வந்தால் சிக்கல் , ஆனால் ஒவ்வொருவராக வந்து செத்தார்கள்

அரபுலகில் இன்று எல்லாவற்றையும் கடந்து ஈரானை மட்டும் சந்திக்க இஸ்ரேல் கிளம்புவது அப்படித்தான்

இஸ்ரேலிய வெற்றி ஒவ்வொன்றையும் பாருங்கள் அவர்கள் கண்ணனை அப்படியே படித்திருப்பார்கள்

அவர்களின் ராஜதந்திரி கீட்ஸேயாகட்டும் , தளபதி மோசே தயானாகட்டும் எல்லாவற்றிலும் கண்ணன் தெரிவான்

சிறிய படைகுழு பெரிய சேதத்தை செய்ய வேண்டும் என்பதை அபிமன்யுவிடம் இருந்து நுணுக்கமாக கற்றனர் இஸ்ரேலியர், மோசே தயான் அதில் தன்னிகரற்று இருந்தார்

போர் ஆயத்தம், நட்பு படை, தலமை, குழு மனப்பான்மை, உளவு படை, அர்பணிப்பு , தகவல் தொடர்பு என எல்லாவற்றையும் போதிக்கின்றது பாரதம்

அதை கொடுத்தவன் சாட்சாத் கண்ணன்.

ஆம் ராணுவம், உளவு, ராஜதந்திரம்,நிர்வாகம் என எல்லாவற்றிலும் வென்றவர்களை பாருங்கள், அதில் எல்லாம் கண்ணனின் முத்திரை இருக்கும்

அவன் காட்டிசென்ற வழி இருக்கும்

ஆம் பெண்ணுரிமையினை மகாபாரதமும் கண்ணனும் சொன்ன அளவு இன்னொரு காவியம் சொன்னதில்லை

பாஞ்சாலி சொல்லுக்கும், குந்தியின் சொல்லுக்கும் பாண்டவரும் கண்ணனும் கட்டுபட்டார்கள் வாழ்ந்தார்கள்

காந்தாரி சொல்லுக்கு கவுரவரிடம் மரியாதை இல்லை வீழ்ந்தார்கள்

பெண்ணின் சொல்லுக்கு மரியாதை கொடுக்கும் இனமும் குடும்பமும் வாழும் என அறுதியிட்டு சொன்னது உலகில் முதலில் மகாபாரதமும் கண்ணனின் வாழ்வுமே

கண்ணனை நாம் கொண்டாடுகின்றோமோ இல்லையோ மேற்குலகம் மவுனமாக அவனை ரசிக்கின்றது, கொண்டாடுகின்றது

எல்லாவற்றுக்கும் மேலாக அவனை மனதில் வணங்கி கண்டிப்பாக பின்பற்றுகின்றது

நாமும் பின்பற்றினால் நிச்சயம் செழிப்போம், கண்ணன் எல்லோருக்கும் எக்காலமும் வழிகாட்டுவான்..

Next Post

Previous Post

Leave a Reply

© 2020 Tamil

Theme by Anders Norén