August 2, 2019

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்-Part-6

By priyesh Prakash

இறைவனின் ஆதிக்கம்

“இறைவனுடைய ஆதிக்கத்கோடு இல்லாத இடமே இல்லை.” என்பது இந்துக்களின் நம்பிக்கை.
காலுக்கு அணியும் காலணியிலிருந்து.தலைக்குப்பிடிக்கும் குடை வரை, ஒவ்வொன்றிலும் இறைவனுடைய ஆதிக்கம் இருக்கிறது.

அன்றாட நிகழ்ச்சிகளெல்லாம் இறைவன் கலைத்துப் போடும் சீட்டு விளையாட்டுகள்.
அந்த விளையாட்டில் சிலர் ஜெயிக்கிறார்கள். சிலர் தோற்றுப் போகிறார்கள்.!

சீட்டு நன்றாக விழுந்து விட்டவர்கள் இரண்டாவது ரவுண்டிலேயே விரித்து விடுகிறார்கள்.
அவர்களை” நல்ல ராசிக்காரர்கள் ” என்பார்கள் இந்துக்கள்.

இந்த நேரத்தில் இந்த மரத்திலிருந்து இத்தனை இலைகள் உதிர வேண்டும் என்பதும் இறைவனுடைய ஆணையே.
யாரும் விதைக்காமலேயே காடு மேடுகளில் செடிகள் வளர்கின்றன.
விதைத்தும் நட்டும் தோட்டங்களில் வளர்கின்றன.
ஆகவே நமது செயல்களுக்கு அப்பாற்பட்டும் ஓர் இயக்கம் நடக்கிறது. நம்முடைய செயலில் இறைவனுடைய இயக்கம் தொடங்குகிறது.
கண்ணாடி என்பது இறைவன் படைத்தது அல்ல.
ஆனால் கண்ணாடிக்கு த் தேவையான மூலப்பொருள் இறைவனால் உண்டாக்கப்பட்டது.

மின்சாரமாயினும், விமானம் போன்ற வாகனங்கள் ஆயினும் அவை அனைத்துமே இறைவனால் உண்டாக்கப்பட்டவையல்ல.
ஆனால் அவற்றுக்குப் பயன்படும் மூலம்” இறைவனிடமிருந்தே வருகிறது.

ஒரு ஆக்கத்தைக் காண்கிற கண்கள் மூலத்தைக் காணும் போது அது இறைவன் கொடுத்தது என்பதை உணர்கின்றன.
ஆகவே எந்த ஜடப் பொருள்களோ ,ஸ்தூலமோ இயங்கும் இயக்கங்கள் அனைத்துக்குமே இறைவனே காரணம்.

இறைவனுடைய சிருஷ்டியில் காரணமே இல்லாத காரியம் எதுவுமில்லை.

ஒருவரோடொருவர் சண்டை போடும் போது காரணமே இல்லாமல் சண்டைக்கு வருகிறாயா! என்று சொல்வதுண்டு.காரணம் இல்லாமல் சண்டை எப்படி வரும்? குறைந்த பட்சம் அவன் குடித்திருப்பான், அல்லது புத்தி புரண்டு போயிருக்கும்.
அது தான் அங்கே காரணம்.

இறைவன் படைத்த இந்தப்பூமியில் ஒவ்வொரு அலுவலிலும் அவனது ஆதிக்கம் இருக்கிறது என்பதை அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் இருப்பதாக இந்துக்கள் சொல்கிறார்கள்.

மூலத்தின்,மூலமாய் முளைத் தெழுந்த லிங்கம் என்கிறார்கள்.
தோன்றுமிடம் எங்கும் ஜோதிப் பிழம்பானாய் ” என்கிறார்கள்.
அணுவில் அணுவாய் அமர்ந்திருக்கும் வித்து” என்கிறார்கள்.

அனைத்துக்குமே அவன் தான் மூலம்” என்பதால் ஆண்டவனை ஆதிமூலம் என்கிறார்கள்.
இந்துக்கள் குறிக்கும் இறைவனின் முதற் பெயரே ஆதிமூலம் தான். ஆதிக்கு அந்தம்” உண்டு என்பதனால் ”அனாதி” என்றும் அழைக்கிறார்கள்.

அந்தம்” அவனுக்கு வராது என்பதால்” ”அனந்தன்” என்கிறார்கள்.
அனந்தராமன்
அனந்தகிருஷ்ணன்
அனந்தநாராயணன்
என்றபெயர்களைக் கவனியுங்கள்.
ஆகவே
மூலம் அவனே
இயக்கம் அவனே
முடிவில்லாமல் இயங்குவதும் அவனே.
அந்த
அந்த இயக்கம் ஒவ்வொன்றிலும் இருப்பதால் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அர்த்தம் இருக்கிறது.என்பது இந்துக்களின் நம்பிக்கை.

இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய WHATSAPP 9789374109