Tamil

die älteste lebendige Sprache der Welt

கனிமவளம்

நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதைக் கண்டறிந்தார் ஓர் விவசாயி. வெள்ளையர் ஆட்சிக்கு தகவல் தந்தார். விடிவில்லை.

முதல்வர் ராஜாஜியிடம் முறையிட்டார்.
ஒன்றும் நடக்கவில்லை.
காமராஜர் முதல்வரானதும் நேரில் சென்று தகவல் சொன்னார். உடனடியாக பொறியாளர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் முதல்வர்.

மிக விரிவான விஞ்ஞானபூர்வமான திட்ட அறிக்கையைத் தயாரித்து தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.

தில்லி சென்று பிரதமர் நேருவிடம் நெய்வேலி திட்டம் பற்றிப் பேசினார்.

காகிதங்களைப் புரட்டியவர் கையை விரித்தார் ..

” இதெல்லாம் சாத்தியமில்லை..”

“ஆய்வு செய்து இந்த அறிக்கையைத் தயாரித்தவர் அனுபவமுள்ள ஒரு பொறியாளர். இந்த திட்டத்தை மறுக்க இரண்டு காரணங்கள்தான் உள்ளன.

ஒன்று இந்த நாட்டில் பொறியியல் படிப்பு தரமாக இல்லை. அல்லது இதையெல்லாம் புரிந்து கொள்ளும் தகுதி அரசியல்வாதிகளான நமக்கு இல்லை..”

கேம்ப்ரிட்ஜில் படித்த அறிவாளியை கிழிகிழியென கிழித்துப் போட்டார் கைநாட்டு பேர்வழி,

கை சுத்தம் .. பிரதமராவது, பெரிய தலைவராவது ,. ..

( உள்துறை செயலாளரைப் பார்த்து நடுங்குகிறவர்கள், ஊழல் செய்து மாட்டிக் கொண்டு கைகால் பிடித்துவிடும் திராவிடான்களுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை )

அடுத்தமுறை பொறியாளருடன் நேருவைச் சென்று சந்தித்தார், விளக்கினார். முதலீடு 150 கோடி என்றார்

“திட்டம் ஓகே.. நிதியில்லையே.. தமிழக அரசு நடத்தலாம்…”

“அரசின் ஆண்டு வருமானம் 150 கோடி ..
எங்களால் எப்படி….”

” நிலக்கரியை வெளியே கொண்டுவர மூன்றாண்டுகள் ஆகும் என்கிறார். ஆண்டுக்கு 50 கோடி போடுங்க…”

முடிவெடுத்தார் தமிழக முதல்வர் தமிழர் காமராசர். என்ன ஒரு மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம். தமிழ்நாடுதானே காமராசருக்கு குடும்பம்.

1954 ல் 50 கோடி ஒதுக்கினார். பணிகள் தொடங்கப்பட்டன.

அடுத்த வருடம் 50 கோடி.

1956 ல் கடைசி தவணையைக் கொடுத்துவிட்டு தவிக்கத் தொடங்கினார்.

பிள்ளை பெண்டாட்டிகளுக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற இன்றைய திராவிட கவலையல்ல.

மக்கள் வரிப்பணமாச்சே.. மத்திய அரசு கேள்வி கேட்குமே …!

சுரங்கப் பணிகள் முடிவடைந்து, நிலக்கரியை வெட்டியெடுத்து வெளியே கொண்டு வரும் நாளில்….

முதல்வர் நெய்வேலி வந்தார். சுரங்கத்தில் நின்றார்.

அதோ..

நீரும் நிலக்கரியும் கலந்து வழியும் கனிம வளத்தை தலையில் சுமந்தபடி தொழிலாளிகள் வருகின்றனர்.

ஓடினார் முதல்வர்….

மகனுக்கும், மத்தியில் இலாக்கா வாங்கவா.. பேரனுக்கு சலுகை கேட்டா..?

தமிழ் மண்ணின் வளம்.. தமிழர் நலம் அல்லவா தலையிலிருந்து கறுப்பு தங்கமாக வழிகிறது ?

தாவியணைத்தார் அந்த தொழிலாளியை… கரியை அள்ளி கைகளால் முகர்ந்தார். ஆனந்தக் கூத்தாடினார்.

வெள்ளை கதர் சட்டை , கறுப்பாகி மின்னியது.

இன்று ஆண்டுக்கு லாபம் 2000 கோடிகள்…!

இந்த பதிவை படித்தபோது என்னையுமறியாமல் என் கண்கள் நனைந்தன.

இப்படியும் ஒரு மனிதர் இவரன்றி பிறந்ததுமில்லை இனி பிறக்கபோவதுமில்லை
ஆனால் இருக்கும் வரை அவர் அருமை தெரியவில்லை.
அண்டங்காக்கை என்று அவரது தோற்றத்தை ஈனத்தனமாக கிண்டலடித்த பேடிகள்! ஸ்விஸ் பேங்கில் பணம் வைத்துள்ளார் என நாகூசாமல் பொய் சொன்ன பொறுக்கிகள்!! இன்றுவரை அனுபவிக்கின்றோம் அந்த பாவத்தை!

படித்த பதிவு பகிரவும்

Next Post

Previous Post

Leave a Reply

© 2019 Tamil

Theme by Anders Norén