in life, you get only what you deserve
தன் நெருங்கிய நண்பனுக்கு,
அவன் இதை ஏன், முன்பே செய்ய நினைக்கவில்லை?
ஓஷோ:
இந்த உலகத்தில்,
உங்களுக்கு வேண்டியதைத்
தேடித்தான் பெற வேண்டியிருக்கிறது…
எதுவும் சும்மா கிடைக்காது.
கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார்…
அவருக்கு, உங்கள் தேவை
தெரியாமல் இருக்காது…
ஆனால், கடவுளுக்கு நீங்கள்
முதுகுகாட்டி நிற்கிறீர்கள்…
உங்களுக்கு அதற்கு உரிமை உண்டு…
நீங்கள் அவரை ஏற்கலாம்!
அல்லது ஒதுக்கிவிடலாம்…
அந்த அளவு உங்களுக்கு உரிமையுண்டு…
இப்போது,
நீங்கள் அவரைப் பார்த்தபடி
திரும்பி நிற்கும்போது…
“ஏன், என்னை நீங்கள் முன்பே கவனிக்கவில்லை?” என்று கேட்க முடியுமா?
அப்படியே கேட்டால்,
கடவுள் என்ன சொல்வார்?
“நீ கேட்காமலேயே கொடுப்பது,
உன் சுதந்திரத்தில்,
நான் தலையிடுவதாகும்’
என்றுதான் சொல்வார்…
சுதந்திரம் என்பது…
வேண்டுவதைப் பெறுவதே தவிர, வேண்டாததைப் பெறுவதல்ல…
தேடாமல் எதுவும் இந்த உலகில் கிடைக்காது, என்பதை மறந்துவிட வேண்டாம்…
தேடல் அவசியம்…
அது உங்கள் சுதந்திரத்தின் ஒரு பகுதி…
குசேலரின் பொருளாதாரக் கஷ்டம்
இங்கு பிரச்சனையல்ல…
அவரின் சுதந்திரம்தான் முக்கிய பிரச்சனை…
கண்ணன் அப்படி பெருந்தன்மையோடு முன்பே கொடுத்திருந்தால்…
குசேலர் மறுத்திருக்கக் கூடும்.
இன்னொரு விஷயம்…
குசேலர் அதைப் பெற தயாராக இருந்தாரா? என்பதுவும் ஒரு பிரச்சனை…
“இதற்கெல்லாம் ஆழ்ந்த உளவியல் அர்த்தங்கள் உண்டு…”
வறுமை இருந்துவிட்டால் மட்டும் போதாது,
அவர் மட்டுமா வறுமையில் வாடுகிறவர்? ஏராளமானவர்கள் உண்டு…
வறுமையில் இருந்தும் கூடக்,
குசேலர் கண்ணனைத் தேடி வந்தது…
வாங்குவதற்கு அல்ல…
கொடுப்பதற்கு என்பது,
முக்கியமான அம்சம்…
குசேலரின் கொடுக்கும் மனோபாவமே, அவரைச் செல்வந்தராக்கியது…
ஒருவர் என்னவாக இருக்கிறாரோ…
அதற்கு அவரே பொறுப்பாளி…
“ஒவ்வொருவரும்,
தம்முடைய மாறுதலுக்கான
பயணத்தைத் தனிப்பட்ட முறையில்
அவரேதான் தொடங்க வேண்டும்…
அவருக்காக, மற்றவர் நடக்க முடியாது…
ஒருவர் தம் பயணத்தைத் துவங்கியவுடனே…
எல்லா சக்திகளும்,
அவருக்கு உதவ முன் வந்துவிடும்!!”
ஓஷோ
கிருஷ்ணா
ஆனந்த நடனம்