Tamil

die älteste lebendige Sprache der Welt

scenery from gujarat to kanyakumari

குஜராத்தில் ஆரம்பிக்கும் அழகிய மேற்கு தொடர்ச்சி மலையானது நமது கன்னியாகுமரி மாவட்டத்தின் கன்னியாகுமரி அருகே உள்ள அழகப்பாபுரம் கிராமத்தில் முடிவு பெறுகிறது நமது மாவட்டத்தை எடுத்து கொண்டால் நமது மாவட்டத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சூழ்ந்து ஒங்கி உயர்ந்து நிற்கிறது இந்த மலை தொடர்கள் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களிலே மலைகளை அதுவும் கடற்கரை பகுதியில் இருந்தது வெறும் 15 முதல் 30 கிலோமீட்டர் தூரத்திலே மிகவும் உயரமான மலைகளை கொண்ட ஒரே கடலோர மாவட்டம் தமிழகத்தில் கன்னியாகுமரி ஆகும் அரபிக்கடலில் இருந்து வீசும் ஈரப்பதம் உள்ள காற்றை இந்தமலைகள் தடுப்பதால் தான் நமக்கு மாவட்டம் முழுவதும் சீராக அனைத்து பகுதிகளிலும் மழைகிடைக்கவும் மாவட்டம் முழுவதும் திரும்பிய திசையில் எல்லாம் நீர்நிலைகளையும் பசும் புல்வெளிகளையும் பார்க்க முடிகிறது . நமது மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்தது 4500 அடிவரை உயரம் கொண்ட அகத்தியர் தெற்கு மலை, காளி மலை, தெற்கன் குருசுமலை, மஹிந்திரகிரி,மாறாமலை,கோதையார், உள்ளிட்ட உயரமான சிகரங்களை கொண்டிருப்பதால் தான் வற்றாத கோதையாறு,பருளியாறு , உள்ளிட்ட ஆறுகளும் பல அருவிகளையும் கொண்டிருக்கிறது, இந்த மலைகள் முழுவதும் நமது மாவட்டத்தை சூழ்ந்து நிற்கும் மலைகள் முழுவதும் அடர்ந்த மரங்கள் இயற்கையாக அதிக மழை பொழிவு காரணமாக வளர்ந்த காடுகளை அதிகளவில் கொண்டிருக்கிறது தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக மாவட்ட பரப்பளவில் 32% காடுகளை கொண்டிருப்பது குமரி மாவட்டம் ஆகும் , இதுமட்டுமா வரிசையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் நமது மாவட்டத்தில் மட்டுமே 10 அணைகள் இருக்கிறது
1) ,மாம்பழத்துறையாறு அணை
2) முக்கடல் அணை,
3) பொய்கை அணை,
4)சிற்றாறு-1அணை,
5)சிற்றாறு-2அணை,
6) பேச்சிபாறை அணை.
7) பெருஞ்சாணி அணை,
8)அப்பர் கோதையார் அணை
9)லோயர் கோதையாறு அணை,
10) சின்ன குட்டியார் அணை,

அருவிகள்,

1)மருதம்பாறை அருவி
2)திற்பரப்பு அருவி,
3) கோதையாறு அருவி,
4) சின்னகுட்டியார் அருவி,
5) சின்ன குட்டியார் இரட்டை அருவி,
6)வேளிசுனை அருவி (வேளிமலை தக்கலை)
7)காளிகோசம் அருவி,
8)உலக்கை அருவி,
இது தவிர நிறைய சிறிய சிறிய அருவிகள்,

ஆறுகள்,

1)பருளியாறு

2)கோதையாறு
( கான்னியாகுமரி மாவட்டத்தின் தாமிரபரணி ஆறு என்றும் குழித்துறைபகுதியில் குழித்துறையாறு என்றும் அழைக்கப்படும் ஆறு கோதையாறு)

3வள்ளியாறு,

4 பழையாறு .

இது தவிர மாவட்டம் முழுவதும் 4000 மேற்பட்ட குளங்கள் அந்த குளங்கள் அனைத்திற்கும் அணையில் இருந்து தண்ணீர் போவதற்கு மாவட்ட முழுவதும் நரம்புகளை போல பின்னி பிணைந்த கால்வாய்கள் இதனால் தான் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நீர்வளம் ,நிலத்தடி நீர் சிறப்பாக இருக்கிறது ,

மேற்கு தொடர்ச்சி மலையுடன் தொடராக இல்லாமல் மற்றொரு தொடராக அதாவது நாகர்கோவில் களியங்காடு பகுதியில் ஆரம்பித்து தக்கலை 12km நீளம் வரை நீண்டும் சுருளோடு வரை 7 கிலோமீட்டர் அளவிற்கு அகன்றும் இருக்கும் வேளிமலையில் தான் நாகர்கோவில் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கடல் அணை‌ மற்றும் வில்லுக்குறி,தக்கலை, குருந்தன்கோடு,முட்டம்,வெள்ளிசந்தா, கல்படி, இரணியல் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் ,விவசாய தேவைக்களுக்கு 210 மேற்பட்ட குளங்களை நிரப்பும் மாம்பழத்துறையாறு அணை உள்ளது எப்போதும் தண்ணீர் அதிகமாக இருப்பது வேளிமலையின் மாம்பழத்துறையாறு அணையின் சிறப்பு ஆகும் இதற்கு காரணம் வேளிமலையில் உயரம் தான் கடல் மட்டத்தில் இருந்தது 3000 அடிவரை உயரம் உள்ளது அடர்மரங்களையும் அதில் குறிப்பாக களியங்காடு, சுங்கான்கடை மலைக்கு மேலே 2000 அடிக்கு மேல் நாகர்கோவில் மழை காடுகள் அடர்ந்துள்ளன Google ல் சென்று *” Nagercoil rain forest * என்று search செய்து பாருங்கள் தெரியும் இந்த வேளிமலை தொடரில் தான் மேற்கு தொடர்ச்சி மலையின் பிற இடங்களை போல எண்ணற்ற விலங்குகள் வேளிமலையில் இருக்கிறது கருங்குரங்குகள்,சிறுத்தைபுலி, மரநாய்,மயில்கள்,மலைபாம்புகள் , செந்நாய் ,காட்டு பன்றிகள்,காட்டு பூனை, கரடி, உட்பட பல்வேறுபட்ட விலங்குகள் வேளிமலை தொடரில் அடர்ந்த காடுகளில் உள்ளன ஆனால் யானை, காட்டுஎருமை போன்ற விலங்குகள் வேளிமலை தொடரில் இல்லை ,யானைகள் அதிகமாக கோதையாறு, பெருஞ்சாணி, சிற்றார்,அகத்தியர், உள்ளிட்ட பகுதிகளில் தான் யானைகளும் காட்டெருமைகளும் அதிகமாக உள்ளது, வேளிமலையில் வள்ளி சுனை அருவி உற்பத்தியாகி எண்ணற்ற சிறு சிறு மலை நீருற்றுக்களுடன் சேர்ந்து வள்ளியாறு வேளிமலை தொடரில் உற்பத்தியாகி வெள்ளிமலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கடியப்பட்டணம் வருவாய் கிராமத்தில் அரபிக்கடலுன் 15 கிலோமீட்டர் பயணம் செய்துவந்து கடலுடன் கலக்கிறது வரும் வழி முழுவதும் இந்த ஆறும் நிறைய குளங்களை நிரப்புகிறது வெள்ளிமலை பஞ்சாயத்து, குருந்தன்கோடு பஞ்சாயத்து, இரணியல் பகுதிகளில் உள்ள கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமும் பஞ்சாயத்து குழாய் இணைப்புகள் மூலமும் தாராளமாக தண்ணீர் அந்த பகுதி மக்களுக்கு எப்போதும் கிடைப்பது இந்த வள்ளியாற்றின் கரையோர பகுதிகளில் அமைக்கப்படிருக்கும் கிணறுகளின் மூலம் தண்ணீர் தராளமாக கிடைக்கிறது, இதுபோல தான் மாவட்டம் முழுவதும் வீட்டு இணைப்பு களிலும் தனியாக அவரவர் தேவைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் 96% வீடுகளில் தனியாக ஆழ்குழாய் கிணறுகள் இருக்கிறது அனைவருக்குமே சுவிட் தட்டினால் தண்ணீர் வர காரணம் நமக்கு நிலத்தடி நீர் சிறப்பாக இருப்பதே ஆகும் அதற்கு மிக முக்கிய காரணம் நம்முடைய மலைகளும் மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் வழியாக நிலத்தடி நீர் சீராக இருப்பதே ஆகும், இந்த மலைகள் மட்டும் இல்லை எனில் கன்னியாகுமரி மாவட்டம் பாலைவனமாக தான் இருந்திருக்கும்

ஜனவரி, பிப்பிரவரி, மாதங்களில் தமிழக நிலப்பரப்பு வழியாக வடக்கில் இருந்தது தெற்கே இந்திய பெருங்கடலை பார்த்து காற்று வீசும் அப்போது தமிழகத்தில் நிலப்பரப்பை கடந்து வரும் காற்று அதிக வெப்பத்தை வடகிழக்கில் இருந்தது பெற்று வரும் அப்போது பிப்ரவரி இறுதி ,மார்ச் மாதம் கேரளா மாநிலம் கூட பல இடங்களில் 40°C மேல் 40°C வெப்பநிலை உயரும் இந்தாண்டு கூட அந்த காலக்கட்டத்தில் கேரளா மாநிலம் பலக்காடு ,திருநெல்வேலி மாவட்டத்தில் அருகே உள்ள கேரளா மாநிலத்தின் புனலூர் அதுபோல ,இடுக்கி பத்தனம் திட்டா மாவட்டங்களில் கடுமையான வெப்பநிலை 40°C தொடர்ந்து பல நாள்கள் பதிவானது , அது எல்லாம் ஏன் தென் தமிழகத்திலே அதிக வெப்பநிலை நிலவும் திருநெல்வேலி மாவட்டத்தின் வள்ளியூர் , பணக்குடி, நான்குநேரி பகுதிகளில் கூட அந்த காலக்கட்டத்தில் 43°C வரை வெப்பநிலை இருந்தது திருநெல்வேலி மாவட்டத்திற்கு நமது மாவட்டத்தில் இருந்தது தினசரி போகும் நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும் நமது மாவட்டம் ஆரல்வாய்மொழி மலைகளை கடந்து வள்ளியூரை நெருங்கும் போது அனல் காற்று பயங்கரமாக வீசுவதை நமது மாவட்டத்தில் இருந்தது திருநெல்வேலி போகும் அனைவருமே அனுபவித்து இருப்பார்கள் ஆனால் திருநெல்வேலி ,தூத்துக்குடி பகுதியில் இருந்தது வரும் வெப்ப காற்றினால் கன்னியாகுமரி மாவட்டம் அனல் காற்று வீசாமல் எப்படி தப்பிக்கிறது என்றால் அதற்கு காரணமே நமது மாவட்டத்தை சூழ்ந்து நிற்கும் மலைகள் தான் கோடையில் வடகிழக்கு திசையில் இருந்து வரும் வெப்ப காற்று மஹிந்திரகிரி, மலை ,ஆரல்வாய்மொழி , தெற்கு மலை RF, கோதையாறு மலைகளின் மேலே வெப்ப காற்று ஏறும் போது மலைகளில் அடர்ந்துள்ளன காடுகளால் காற்றானது குளிர்விக்கப்படுகிறது இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் வீசுவதை போன்று அனல்காற்று குமரியில் கடும் கோடையில் கூட எங்குமே வீசாது கோடையில் நாகர்கோவில் நகரில் சற்று வெயில் அதிகமாக அதாவது 38°C வந்தாலும் தொடர்ந்து இருக்காது பெரும்பாலும் கோடையில் கூட பெரும்பாலான நாள்கள் கன்னியாகுமரி ,திருவனந்தபுரம் மாவட்டங்கள் மழையை பெறும் இதற்கு காரணமே நம்முடைய காடுகளும் உயர்ந்த மேற்கு தொடர்ச்சி மலையும் தான் அதிக வெப்பம் ,அதிக குளிர் இதிலிருந்து காத்து இதமான தட்பவெப்ப சூழலை 32°C. முதல் 26°C கடலோர பகுதிகள் உட்பட மாவட்ட சமவெளி பகுதியில் நிலைநிறுத்த மேற்கு தொடர்ச்சி மலையும் காடுகளும் மிகவும் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது மழை பொழிவுக்கு அவசியம் ஈரப்பதம் நமது மாவட்டம் முழுவதும் மரங்களையும் ,காடுகளையும் அடர்த்தியாக பெற்றிருப்பதாலும் அரபிக்கடலின் காற்றில் ஈரப்பதம் எப்போதுமே அதிகமாக உள்ளது கேரளாவிலும் ,குமரியிலும் அதாவது மேற்கு தொடர்ச்சி மலையின் மறு சரிவு பகுதியில் 80% முதல் 100% ஈரப்பதம் இருப்பதால் மேகங்களை எப்போதுமே வானில் பார்க்க முடிகிறது இதனால் இதமான சூழல் உள்ளது எனவே மலைகளை பாதுகாப்பது அவசியமான ஒன்றாகும் காடுகளையும் மலைகளையும் காப்பது நமது கடமை , தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மாவட்டங்களில் காடுகளும் கிடையாது பெரிதாக மலைகளும் கிடையாது இதனால் மேற்கண்ட கடற்கரை பகுதிகள் ஆண்டில் பல மாதங்கள் வறண்டே இருக்கிறது , தென் தமிழகத்திலே மழை மிகவும் குறைவாக பொழியும் மாவட்டம் #தூத்துக்குடி மாவட்டம் ஆகும் ஆண்டிற்கு வெறும் 620mm அது கூட பல ஆண்டுகள் சரியாக பொழியாது திருநெல்வேலி கிழக்கு, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ,திருவாரூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பெரிதாக மலை எதுவும் இல்லாத காரணத்தால் ஒரு வெப்ப சலன மழை கூட பொழிவது சவலான விஷயம், அதுபோல தான் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் நாகப்பட்டினம், போன்ற கடற்கரை நகரங்களிலும் வெப்ப சலனம் காரணமாக ஓரளவுக்கு மழை கிடைக்கிறது அதற்கு காரணம் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் பயனால் தான் எனவே மலைகளை பாதுகாப்பது அவசியம்

கீழே இருக்கும் புகைப்படம் நாகர்கோவில் பார்வதிபுரம் (களியங்காடு) ,தக்கலை வரையுள்ள வேளிமலை தொடர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு எடுத்த அழகிய இயற்கை காட்சிகளின் புகைப்படம் இந்த மலையில் அடிவாரத்தில் உள்ள துணை மலைகளை தான் இப்போது அதிகமாக அழித்து வருகிறார்கள் மலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்த தான் இந்த பதிவு.

Next Post

Previous Post

Leave a Reply

© 2019 Tamil

Theme by Anders Norén