September 7, 2021

நோக்கு கூலி

By Tamil

கேரளாவில், ISRO வின் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு (VSSC) பெரும் லாரியில் வந்த பொருளை இறக்க அனுமதிக்க மறுத்து, தங்களுக்கு “நோக்கு கூலி” – அதாவது அதை பார்த்ததற்க்கே கூலி தரவேண்டும் என்று தகராறு செய்த தொழிலாளர் சங்கம்!

: செய்தி!
——————–
சரி,.. இந்த “நோக்கு கூலி” என்றால் என்ன? என்று பலருக்கும் தெரியாமல் இருப்பதால்,..

நண்பர் Anantha Narayanan அவர்களின் பின்னூட்ட விளக்கத்தையே பதிவாய் இங்கு. நன்றி, அனந்த்.
——————–
கேரளத்தில்,..

நம்மூர் போன்று, வீடுகளுக்கோ, நிறுவனங்களுக்கோ, தேவையான பொருள்களை நாமே டெம்போக்களில் ஏற்றிக் கொண்டு வந்து இறக்கிவிட முடியாது.

பாரம் ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள்தான் பொருள்களை ஏற்றி, இறக்குவார்கள். (தொழிற்சங்க, சமூக விதி! காலம் காலமாய் இருப்பது!)

“தொழிலாளர்கள் வாழ்க்கை மேம்படட்டும்” என, நாம் அவர்கள் மூலம் பொருள்களை இறக்கினால்,..

வாங்கிய பொருளுக்கு சமமான தொகையை, “இறக்குக் கூலி”யாகக் கேட்பார்கள். இதனால்தான் கேரளத்தில் தொழில் தொடங்க பலரும் பயப்படுகிறார்கள்.

சில நேரங்களில், டைல்ஸ், கண்ணாடி பொருள்களைக் “கவனமாக இறக்கும்படி” கூறினாலும், தொழிலாளர்கள் அவசரகதியில் இறக்குவதால், உடைசல் ஏற்படும். இதனால் சிலர் சொந்த தொழிலாளர்களைக் கொண்டு அந்தப் பொருள்களை இறக்குவார்கள்.

அப்படி இறக்கிக் கொண்டிருக்கும் போது, தொழிற்சங்கத்தினர் வந்து, சற்று எட்ட நின்றுகொண்டு, பொருள்களை இறக்கி முடிக்கும் வரை “பார்த்துக் கொண்டே” இருப்பார்கள்.! பின்னர் “நோக்கு கூலி” (பார்த்துக் கொண்டிருந்ததற்கான கட்டணம்!) என அந்தப் பொருளை ஏற்றி, இறக்கும் அளவுக்கான தொகையை, ரசீது போட்டு வசூலித்து விட்டுதான் செல்வார்கள்.!

“பணம் கொடுக்க முடியாது” எனக் கூறினால், அந்த ஊர் தொழிற்சங்கத்தினர் திரண்டு வந்து, பிரச்னை செய்து விடுவார்கள். அடுத்த முறை, அவசியத்துக்குக் கூட, எந்த ஒரு பொருளையும் ஏற்றவோ இறக்கவோ முடியாதபடி, தொல்லை தருவார்கள்!

“நோக்கு கூலி”யால் நொந்து போனவர்கள், கொஞ்சம் நஞ்சமல்ல.!

கேரள பிரபல நடிகர் கரமன ஜனார்த்தனனின் மகன், சுதீர் கரமன, தனது திருவனந்தபுரத்தில் வீட்டில் வைப்பதற்காகக் கடந்த மாதம் ஆட்கள் மூலம் டைல்ஸ் இறக்கினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள், “நோக்குகூலி” என ரூ.25,000/- வசூலித்து விட்டனர்.
—————–
இது இப்படி என்றால்,..

இதேபோல, இன்னொரு வினோதமான கூலியும் உண்டு அங்கு.

உங்கள் கடைக்கு ’ஒரு வண்டி’ சிமெண்டு மூட்டைகள் வருகிறது என்று வைத்து கொள்வோம். அதை உங்கள் ஆட்களை வைத்து இறக்கி வைக்கக் கூடாது.

தொழிலாளர் சங்கத்து ஆட்களை வைத்துதான் இறக்க வேண்டும்.

இல்லையென்றால், அவர்கள் வந்து, மூட்டைகளை தொட்டுவிட்டுப் போய் விடுவர்.! அதற்கு கூலி கொடுக்க வேண்டும்.

அதன் பெயர் ”தொடு கூலி”.
—————–
ஆனால்,..

இதுக்கெல்லாம் துளியும் வெட்கப்படாமல்
இருப்பதுதான், அங்குள்ள காம்மிகள்,
தொழிற்சங்கங்களின் தனிச் சிறப்பு!
—————–
பி.கு.: வெறும் 2 நாட்கள் முன்புதான் கேரள உயர்நீதி மன்றம், கேரள அரசை, இந்த “நோக்கு கூலி” எனும் கேலிக்கூத்தை ஒழித்துக் கட்டச் சொல்லி அறிவுறுத்தியது!

ஆனால் என்ன செய்ய! சேட்டன் விஜயன், வெறுமென சீன வைரஸ் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கையில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக கேரளம் இருந்தால் போதாது என்று,..

அடுத்து நீபா வைரஸ் தொற்று க்கு,
நோக்கு கூலி / தொடு கூலி,
தந்து கொண்டு இருக்கிறார்!
—————–
இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம்!
எண்டே குருவாயூரப்பா!

நன்றி ; Ramakrishnan Sivasankaran