August 5, 2019

பொதுவாகவே இரும்பு சம்பந்தமுடைய பொருள்களைப் பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் எவர்சில்வர் தட்டு போன்ற பொருள்களைக்கூடப் பயன்படுத்தக் கூடாது

By Tamil

பொதுவாகவே இரும்பு சம்பந்தமுடைய பொருள்களைப் பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் எவர்சில்வர் தட்டு போன்ற பொருள்களைக்கூடப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், தற்போது பல இடங்களில் பல சூழ்நிலைகளில் பயன்படுத்திவருவது சற்று கவலையளிப்பதாகவே உள்ளது. முக்கியமாக, ஹோமம் போன்ற உயரிய கிரியைகளுக்கு இரும்பு சம்பந்தப்பட்ட பொருள்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. அதேநேரம், `இதனால் பித்ருக்கள் வரமாட்டார்கள்’ என்று சொல்வது தவறு. நாம் அன்பாக அழைத்தால் கண்டிப்பாக வருவார்கள்.

தாங்கள் தொலைபேசியில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, தங்களின் தொலைபேசி யில் ஏதேனும் பிரச்னை இருந்தால், உரையாடலில் சிறிது சிரமம் இருக்கலாம் அவ்வளவுதான்.

அதுபோல் பூஜைகளோ, முன்னோர் ஆராதனை களோ… இயன்றவரை அவற்றுக்கென்று கூறப்பட்ட பொருள்களைக்கொண்டே செய்யவேண்டும். அப்போதுதான் முழுமையான பலன் நமக்குக் கிடைக்கும். பூஜை, ஹோமங்களில் இரும்பு சம்பந்தமானவற்றைத் தவிர்த்து, செப்பு, பித்தளை, வெள்ளி, மண் அல்லது மரம் போன்றவற்றால் ஆன பொருள்களைப் பயன்படுத்தலாம்.