June 28, 2019

பெயருக்கு பின்னால் சாதி பெயர்

By Tamil

பெயருக்கு பின்னால் #சாதி பெயர் சேர்த்துக் கொள்வதைப் பற்றி ஒரு விவாதம் நடந்தது.

சிறப்பு விருந்தினராக இயக்குநரும், நடிகருமான கரு. #பழனியப்பன் அவர்களும், நடிகை #பார்வதி_நாயர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

விவாதத்தில் சாதி பெயர்களை பின்னால் சேர்த்து கொள்பவர்களை சாதி வெறியர்கள் என்ற ரீதியில் வசைபாட ஆரம்பித்து விட்டார்கள்.

விவாதத்தில் கரு.பழனியப்பன் அவர்கள் கூறினார்கள்… நீங்கள் சாதி பெயரை பின்னால் சேர்த்துகொள்கிறீர்கள், ஆனால் என்னால் அது முடியவில்லையே…?

நான் பசியோடு இருக்கும் போது என்னைப் பார்க்க வைத்து நீங்கள் மட்டும் சாப்பிடுவது நியாயமா? என்று கேட்டார் உடனே எதிர்ப் பக்கத்திலிருந்த ஒருவர் எழுந்து, தவறுதான் இனிமேல் நான் சாதி பெயரை என் பின்னால் சேர்த்துகொள்ள மாட்டேன் என்று கரு.பழனியப்பன் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டார்.

அதை பார்த்த ஒரு சிலரும் எழுந்து சென்று அந்தப்பக்கத்தில் அமர்ந்து கொண்டார்கள். இப்போது எதிர்ப்பக்கத்தில் நான்கு பேர் மட்டும் அமர்ந்திருந்தார்கள்

சரி ! அதை அப்படியே விட்டுவிட்டு என் கதையை கொஞ்சம் கேளுங்கள்…!

12ம் வகுப்பு முடித்தபிறகு நானும் என் நண்பனும் ஒரு அரசு கல்லூரிக்கு சென்று அப்ளிகேஷன் வாங்கினோம்… அது என் நண்பனுக்கு இலவசம். ஆனால் எனக்கு ரூ.500…! சரிவிடு பரவாயில்லை….

என்னைவிட என் நண்பனுக்கு மார்க் குறைவு. அவனுக்கு அரசாங்க கல்லூரியில் இடம் கிடைத்தது. எனக்கு இடம் கிடைக்கவில்லை… சரிவிடு !பரவாயில்லை… நான் தனியார் கல்லூரியில் என் சொந்தப் பணத்தைக் கட்டிப் படித்தேன்….

ஆனால் என் நண்பன் அரசாங்க கல்லூரியில் இலவசமாக படித்தான்… இத்துடன் அவனுக்கு அரசாங்க கல்லூரியில் வருடாவருடம் அரசாங்கம் ஊக்கத்தொகையா பணம்வேற கொடுத்தது…

சரிவிடு பரவாயில்லை… பின்பு என் நண்பனுக்கு படித்து முடித்த முன்று,நான்கு வருடங்களில் அரசாங்க வேலை கிடைத்தது… ஆனால் எனக்கு இன்னும் அரசாங்க வேலை கிடைக்கவில்ல……

ஆக இவ்வளவு சலுகைகளை அவன் சாதி அடிப்படையில் பெற்றுக்கொண்டு அவன் பேசுவது என்னவென்றல் ஏன் நீ உன் பெயர்க்கு பின்னால் உன் சாதியை சேர்க்கிறாய் ?.. என்று .

இதை எதற்கு இங்கே கூறினேன் என்றால்….

நான் பசியோடு இருக்கும் போது என்னை பார்க்க வைத்து நீங்கள் மட்டும் சாப்பிடுவது நியாயமா? என்று கரு.பழனியப்பன் கேட்டார் அல்லவா?

திரு. கரு.பழனியப்பன் அவர்களே…!

நாங்கள் சாப்பிட இருக்கும் சாப்பாட்டை நீங்கள் உங்கள் சாதியை காரணம் காட்டி பிடுங்கித் தின்கிறீர்களே? இது மட்டும் எந்த விதத்தில் நியாயம்?
உங்கள் பெயருக்கு பின்னால் சாதியை சேர்த்துகொள்ள வெட்கப்படும் நீங்கள் சாதி சலுகைகளை பெற மட்டும் வெட்கப் படுவதில்லையே ஏன்? அது மட்டும் இனிக்கிறதா? நாங்கள் உங்களை பெயருக்கு பின்னால் சாதி சேர்த்துகொள்ள கூடாது என்று வற்புறுத்தினோமா? இல்லையே…???

OC- வகுப்பை சேர்ந்தவன் என்பதால் கூலி வேலை செய்பவனைக்கூட அவர்கள் சொல்வது அவன் சாதி வெறியன் என்று… ஆனால் சாதியை வைத்து சலுகைகளைப் பெற்றுகொண்டு, டாக்டராகி ஏசி ரூமில் உட்கார்ந்துகொண்டு, வாழ்வின் வசதிகள் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு மகனையும் மகளையும் பெரிய கல்லூரியில் படிக்க வைப்பவன் சாதி மறுப்பாளனாம்… நல்லா இருக்குடா உங்க நியாயம்…
caste system in india

இந்துமதம் என ஒன்றே இல்லை, அதெல்லாம் கட்டுகதை என கோவில்மாடு போல இல்லை இல்லை என தலையாட்டும் கூட்டம் எல்லா காலத்திலும் உண்டு

ஆனால் ஈராக்கின் மலைபகுதியில் கண்டெடுக்கபட்ட சிற்பம் ஒன்று உலகை அதிரவைத்திருகின்றது, அதன் பழமை 4000 ஆண்டுக்கும் முந்தையது.

ராமபிரானை வணங்கும் அனுமரின் சிற்பம் அது, மிக தெளிவாக அக்காட்சி இருக்கின்றது

ஆக ஆசியா முழுக்க இந்துமதம் பரவியிருந்ததும், அரேபியா முழுக்க அது ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தியதும் உறுதியாகின்றது

அரேபியாவின் இஸ்லாமை ஏற்காத யாசிடி பழங்குடியினர் பின்பற்றும் மதம் இந்துமத சாயலே, முருகன் கதை அதில் அப்படியே உண்டு

யூதம், கிறிஸ்தவம், கிரேக்கம், ரோம மதம், இஸ்லாம், ஜெராஷ்டிரியம் என பல வந்து அதை துடைத்துவிட்டாலும் அதன் சுவடுகள் இன்றும் உண்டு

அது கிடைத்திருக்கும் இடம்தான் முக்கியமானது, ஆம் மெசபடோமியா எனும் அப்பகுதி நாகரீகத்தின் தொட்டில். அங்குதான் மானிட இனம் முதல் முதலாக நாகரீக வாழ்வினை தொடங்கிற்று

கலை, அறிவியல், உணவு,இசை என எல்லாமும் அங்குதான் முதலில் உருவாகிற்று

ஐரோப்பியா காட்டுமிராண்டி தேசமாக இருந்தபொழுதே அரேபியா அறிவும் சிந்தனையுமிக்க தேசமாயிருந்தது

அலெக்ஸாண்டர் கிழக்கு நோக்கி பாய்ந்ததற்கு அதுதான் காரணம்..

அந்த மகா சிறப்புமிக்க இடத்தில் கிடைத்திருப்பதுதான் ராமன் சிற்பம்

கிழக்காசியாவில் தாய்லாந்து, இந்தொனேஷியா, மங்கோலியா,சைனா என இன்றும் இந்துக்களின் அடையாளம் இரண்டற கலந்திருக்கின்றது

மங்கோலியாவிலும் சீனாவிலும் முருகன் அடையாளம் அவர்கள் பாணியில் உண்டு

திருமாலை புத்தராக்கி தூங்கும் புத்தராக்கிய கிழக்காசியா முருகனையும் மயில்மேல் வரும் புத்தனாக மாற்றியது

இதெல்லாம் ஆழ கவனித்தால் புரியும் விஷயங்கள்

நேற்று வந்த மெசபடோமியாவில் கிடைக்கபெற்ற ராமன் சிற்பம் இந்துமதம் 4 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே உலகில் நிலைபெற்று இருந்தது என்பதற்கான ஆதாரமும் சாட்சியுமாகும்