August 2, 2019

வெற்றுப்படகு

By priyesh Prakash

யார் எப்படி அவமானப் படுத்தினாலும் கோபமே படாதவர் அந்த துறவி.

‘எப்படி இவரால் இப்படி இருக்கமுடிகிறது?’ அந்த ரகசியத்தை அறிந்து கொள்வதில் ஒரு சிஷ்யருக்கு ஆர்வம்.

தன் கேள்வியை அந்தத்துறவியிடமே கேட்டார். துறவி பொறுமையாக விளக்கினார்.

“ஒரு ஏரியில் காலியான படகில் அமர்ந்து தியானம் செய்வது என் வழக்கம். அப்படி ஒருமுறை தியானத்தில் இருந்தபோது நான் அமர்ந்திருந்த படகை வந்து முட்டியது ஒரு படகு. ‘இப்படி அஜாக்கிரதையாக முட்டவிட்டது யார்?’ என்று கோபமாகக் கண்களைத் திறந்து பார்த்தால்…

அது ஒரு வெற்றுப்படகு!

காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து மோதியிருக்கிறது. என் கோபத்தினை அந்த வெற்றுப்படகிடம் காட்டி என்ன பயன்?….

யாராவது என்னைக் கோபப்படுத்தும்போது இதுதான் நினைவுக்கு வரும்; இதுவும் வெற்றுப் படகுதான் என்று அமைதியாகி விடுவேன்!”

கேட்ட சிஷ்யர் தெளிவுபெற்றார்.