Swami Vivekananda’s quotation 1.நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும் மேலும் அவ்வப்போது உங்களிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து ஆனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லா விட்டால் உங்களுக்குக் கதிமோட்சமில்லை. 2. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ… Continue Reading நம்பிக்கையும் வலிமையும்

நம் நன்மையை மட்டுமே நினைக்கின்ற சுயநலம், பாவங்கள். அனைத்திலும் முதற்பாவமாகும். நானே முதலில் உண்பேன் . மற்றவர்களைவிட எனக்கு அதிகமான பணம் வேண்டும் , எல்லாம் எனக்கே வேண்டும் மற்றவர்களுக்கு முன்னால் நான் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்றெல்லாம் நினைப்பவன் சுயநலவாதி. சுயநலம் கொண்டவன் எல்லா கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்ததாலும் சிறத்தைதயப்போல் தன் உடம்பு முழுவதிலும் மதச் சின்னங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாலுமும் அவன் சிவ பெருமானிடமிருந்து… Continue Reading சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்-பகுதி 10

நம்முடைய எதிர் காலத்தை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதை இந்த வாழ்க்கையில் பார்க்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும், மறு நாளுக்கான ஏற்பாடுகளைச் செய்யவே முயன்று கொண்டிருக்கிறோம். இன்று, நாளைய விதியை நிர்ணயிக்கிறோம். நாளை, நாளைக்கு அடுத்த நாளின் விதியை நிர்ணயிப்போம். இவ்வாறே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த வாதத்தை இறந்த காலத்திற்குப் பொருத்திப் பார்ப்பது, நியாயமானதே. நாம் நமது செயல்களாலேயே நம் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்கிறோம் என்றால்,… Continue Reading கடவுள்மீது பழி சுமத்தக் கூடாது.

சுவாமி விவேகானந்தர் 9-7-1897 ல் அமெரிக்காவில் உள்ள சகோதரிக்கு எழுதிய கடிதம் அன்பு சகோதரி மேரி ஹேல் உனது கடிதத்தில் தொனித்த மனச்சோர்வு எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. நான் ஜாதியிலிருந்து விலக்கப்பட்டதாக அமெரிக்க பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்தி தவறு. நானோ ஒரு துறவி எனக்கு ஜாதியே கிடையாது.இதில் ஜாதியிலிருந்து விலக்குவது எங்கிருந்து வந்தது? நான் தெருவில் போனால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ்படை அவசியமாகிவிடுகிறது என்று ஒன்று கூறினால் போதுமே!… Continue Reading சுவாமி விவேகானந்தர் 9-7-1897 ல் எழுதிய கடிதம்

நாம் எதையும் பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக வெளியே செல்லவில்லை, நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகளைக் கவனிக்கவில்லை. இந்தியா மனத்தின் வீழ்ச்சிக்கு இது ஒரு முக்கியக் காரணம். அதற்கான தண்டனையை நாம் பெற்றுவிட்டோம், இனியும் அவ்வாறு இருக்க வேண்டாம். நீங்கள் பிற நாடுகளில் எந்த அளவிற்க்கு பயணம் செய்கிறீர்களோ, அந்த அளவிற்க்கு உங்களுக்கு நல்லது, உங்கள் நாட்டிற்கும் நல்லது. இதை நீங்கள் கடந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால்,… Continue Reading சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்-பகுதி 17

சிகாகோவில் நடைப்பெற்ற சர்வ சமயப் பேரவை: கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து 400 ஆண்டுகள் ஆகியிருந்தது. அதன் நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்கு, அமெரிக்காவில் சிகாகோ மாநகரத்தில், பிரம்மாண்டமான ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தக் கண்காட்சியில் அறிவியல், பொருளாதாரம் என்று சுமார் 20 பேரவைகள் நடைபெற்றன. அங்கு சர்வ சமய பேரவை சொற்பொழிவுகள் 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை, பதினேழு நாட்கள் நடைபெற்றன. அங்கு ஒவ்வொரு… Continue Reading சிகாகோ சொற்பொழிவு

அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன். இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள்… Continue Reading Swami Vivekananda’s Chicago address – Tamil

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-20 சுவாமி பாஸ்கரானந்தர் இந்தியப் பெண்ணைப் பொருத்த வரை இன்றும் கூட திருமணம் என்பது ஏமாற்றத்தை அளிப்பதாகவோ சுய விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலோ அமைவதில்லை. மாறாக அது அவர்கள் தன்னையே கணவனுக்காக அர்ப்பணித்துக் கொள்ளும் வேள்வியாக அமைகிறது. இன்றளவும் கூட இந்தியப் பெண்ணானவள் தன் கணவனை மணந்துகொண்டு அவனிடம் மட்டும் அன்பைக் காட்டுவதில்லை. திருமணம் செய்து கொள்வதன் மூலம் கணவனது குடும்பம் முழுவதையும் தத்தெடுத்துக்கொள்கிறாள். கணவனது குடும்பத்தினரின்… Continue Reading இந்தியப் பெண் – பசு புனிதமானதா?

அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பல அலுவலர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும், தானே அரசனிடம் மிகுந்த ஈடுபாடு உள்ளவனென்றும், அரசனுக்காக உயிரைத் தரவும் ஆயத்தமாக இருப்பதாகவும் சொல்லி வந்தனர். ஒரு நாள் அரசபைக்கு துறவியொருவர் வந்தார். அரசன் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, தனது அலுவலர்களின் நேர்மையைக் குறித்துப் பெருமையாகக் கூறினார். ஆனால் துறவி அதை சோதிக்க விரும்பினார். அரசனும் அதை அனுமதித்தான். ஒரு சிறிய சோதனை வைத்தார் அத்துறவி. அவர்… Continue Reading ஒரு குடம் பால்

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-23 சுவாமி பாஸ்கரானந்தர் ஈஸ்வரன் அல்லது சகுண பிரம்மம் உருவக்கடவுளும், அருவக்கடவுளும் எந்த வகையிலும் வேறுபாடுகள் கொண்டவை அல்ல. ஒரேக் கடவுளே எல்லையற்றதாக கருதும் போது நிர்குணப் பிரம்மமாகவும் , வரையறைக்குட்பட்டதாகக் கருதும் போது சகுணப் பிரம்மமாகவும் தெரிய வருகிறது. இந்து மதத்தில் உருவக்கடவுள் சகுணப்பிரம்மம் அல்லது ஈஸ்வரன் என்று சொல்லப்படுகிறது. இந்த உலகத்தில் வாழும் மனிதன் இடம் , காலம், காரணம் ஆகியவற்றினால் கட்டுப்பட்டவன். அவனது… Continue Reading ஈஸ்வரன் அல்லது சகுண பிரம்மம்