…அவளுக்கு அம்மாவும் அப்பாவும் ஆசை ஆசையாய் „அத்துழாய்“ என்று தூய தமிழில் பேர் வைத்தனர். அப்படித் தான் அன்புடன் வீட்டிலும் கூப்பிட்டனர். ஆனால் கூடப் பழகும் பெண்டுகள் எல்லாம் அத்துழாய் என்று முழுப் பேரையும் நீட்டி முழக்க முடியாமல் „அத்து“ என்று கூப்பிட… அட, இது என்ன அத்து, தத்து, பித்துன்னு….துளசி-ன்னே கூப்பிடுங்க-ன்னு சொல்லிட்டாங்க! துளசி என்ற சொல் தானே, தூய தமிழ்ப் பாசுரத்தில் துழாய் என்று வருகிறது! நாற்றத்… Continue Reading குட்டிப் பெண் துளசி…

அன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும்தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை. ஒருவன் உடலும் மனமும் தூய்மையாக இல்லாமல், கோயிலுக்குச் செல்வதும் சிவபெருமானை வழிபடுவதும் பயனற்றவை. உடலும் மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்துகொண்டு, பிறருக்கு மதபோதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியே அடைகிறார்கள். புற வழிபாடு என்பது, அக வழிபாட்டின் அடையாளம் மட்டுமே ஆகும். அக வழிபாடும் தூய்மையும்தாம் உண்மையான விஷயங்கள்.… Continue Reading சொற்பொழிவு – விவேகானந்தர்

ஒரு முறை அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர், இறைவனை அனுபூதியில் உணர்ந்த நிலை என்பது பற்றிச் சொற்பொழிவு செய்தார். அந்தச் சொற்பொழிவில் அவர், இறைவனைப் பற்றிய உயர்ந்த அனுபவத்தை நேரடியாகப் பெற்ற ஒருவர், எந்தச் சூழ்நிலையிலும் கலங்குவதில்லை – பதற்றப்படுவதில்லை என்று குறிப்பிட்டார். இந்தச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் இளைஞர்கள் சிலரும் இருந்தார்கள். இவர்கள் உயர்கல்வி கற்றவர்கள். ஆனால் இந்த இளைஞர்கள் மனம் போனபடி வாழ்ந்தனர். அவர்கள், விவேகானந்தர் கூறியதை நாம்… Continue Reading இறைவனை அனுபூதியில் உணர்ந்த நிலை

நியூயார்க் 19.11.1894 என் வீர இளைஞர்களுக்கு, அன்பு, நேர்மை, பொறுமை ஆகிய மூன்றும் இருந்தால் போதும் – வேறு எதுவும் தேவையில்லை. அன்புதான் வாழ்க்கையின் ஒரே நியதி. எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான். மற்றவர்களுக்கு நன்மை செய்வதுதான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமல் இருப்பதுதான் மரணம். என் இளைஞர்களே, அன்புடையவர்களைத் தவிர மற்றவர்கள் வாழ்பவர்கள் அல்லர். என் குழந்தைகளே! மற்றவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும் – மற்றவர்களுக்காக உங்கள் மனம்… Continue Reading சென்னை இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதம்

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-21 சுவாமி பாஸ்கரானந்தர் புனித நூல்களில் பரிந்துரைக்கப்பட்ட சரியான உணவு வகைகள்- சாறுள்ளதும் பசியைப் போக்க வல்லதும் முழுமையானதும் நமக்கு ஒத்துக் கொள்ளக் கூடியதுமான உணவு தான் உடலின் ஆரோக்கியத்திற்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் ஏற்றது என்று இந்துக்களின் புனித நூலான பகவத்கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதிகமான கசப்போடு கூடியவை ,காரமானவை,புளிப்பானவை,மிகவும் உவர்ப்பானவை,உஷ்ணமானவை, உலர்ந்தவை மற்றும் எளிதில் எரியக்கூடிய உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். மேலும் பழைமையானவை, ருசியற்றவை,தூய்மையற்றவை,மற்றும் அழுகியவை… Continue Reading புனித நூல்களில் பரிந்துரைக்கப்பட்ட சரியான உணவு வகைகள்

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-22 சுவாமி பாஸ்கரானந்தர் நிர்குணப் பிரம்மம் படைப்புத் தொழில் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது யார்? என்ற வினாவிற்கு படைப்பு கடவுள் அல்லது கடவுள் என்ற விடைதான் தர்க்க ரீதியாகக் கிடைக்கும். படைப்பிற்கு முன்னால் கடவுள் எப்படி இருந்தார்? என்று கேட்டோ மேயானால் மனிதனுடைய அனுபவ அறிவுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்தார் என்று இந்து மதம் பதிலளிக்கும். வெளி ,காலம், இடம் என்பவை இவ்வுலகுடன் தொடர்புடையவை. எனவே கடவுள்… Continue Reading நிர்குணப் பிரம்மம்

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-24 சுவாமி பாஸ்கரானந்தர் மதமானது சீர் குலைந்து அநீதிகள் தலைவிரித்து ஆடும் போது கடவுள் கருணைக் கொண்டு பூமியில் அவதரித்து அதர்மத்தை அழித்து நீதியை நிலைநாட்டி மதத்திற்குப் புத்துயிர்ச்சி அளிக்கிறார் என்பது இந்து மதக் கொள்கையாகும். அவ்வாறு தோன்றும் கடவுளை வட மொழியில் அவதாரம் என்றும் தமிழில் தெய்வம் மானுட உருவில் தோன்றுதல் என்றும் சொல்லப்படுகிறது. உலகம் தோன்றிய காலந்தொட்டே கடவுள் பல முறை மனித உருக்கொண்டு… Continue Reading தெய்வங்கள் மனித வடிவில் அவதரித்தல்

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை யென்னுஞ் செறுக்கு. மு.வ உரை : தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார் தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர். கலைஞர் உரை : தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள். சாலமன் பாப்பையா உரை : தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ… Continue Reading Kural -201

எண்ணெய் மற்றும் காரப் பொருட்களைச் சாப்பிடுவது நல்லதல்ல. லூச்சியை (பூரி) விடச் சப்பாத்தி நல்லது. லூச்சி, நோயாளிகளின் உணவு.மீன், இறைச்சி, புதிய காய்கறிகளைச் சாப்பிடு. இனிப்பைக் குறைத்துக் கொள் நாகரீகம் படைத்தவர்கள் கருத்தைப் பார்ப்பார்களே, தவிர மொழியழகைப் பார்ப்பதில்லை. ஆன்மீகத்தில் ஒரு நாட்டினர் அல்லது சமுதாயத்தினர் முன்னேறி இருக்கும் அளவிற்கு அவர்களது நாகரீகமும் உயர்ந்ததாக உள்ளது. பல எந்திரங்களையும், அது போன்ற பிறவற்றையும் கொண்டு வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொண்டதால்… Continue Reading சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்-பகுதி 19

நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதைக் கண்டறிந்தார் ஓர் விவசாயி. வெள்ளையர் ஆட்சிக்கு தகவல் தந்தார். விடிவில்லை. முதல்வர் ராஜாஜியிடம் முறையிட்டார்.ஒன்றும் நடக்கவில்லை.காமராஜர் முதல்வரானதும் நேரில் சென்று தகவல் சொன்னார். உடனடியாக பொறியாளர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் முதல்வர். மிக விரிவான விஞ்ஞானபூர்வமான திட்ட அறிக்கையைத் தயாரித்து தமிழக அரசிடம் ஒப்படைத்தார். தில்லி சென்று பிரதமர் நேருவிடம் நெய்வேலி திட்டம் பற்றிப் பேசினார். காகிதங்களைப் புரட்டியவர் கையை விரித்தார்… Continue Reading கனிமவளம்