இந்து மதத்தின் வரலாறு-பாகம்-19 சுவாமி பாஸ்கரானந்தர் இந்து சமுதாயத்தில் குழந்தைகள் நடத்தப்படும் விதம்- ஒரு நல்ல இந்து குடும்பத்தில் தாத்தா, பாட்டி, சித்தப்பா, மாமா, அத்தை போன்ற உறவினர்களுடன் வளரும் குழந்தைகளுக்குப் பல அனுகூலங்கள் உண்டு. அம்மாதிரி வளரும் குழந்தைகளுக்குச் சிறந்த அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். காப்பகங்களில் விடப்படும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்பவர்கள் பணத்திற்காக வேலை செய்பவர்கள். எனவே வீட்டில் பெரியவர்களுடன் வளரும் குழந்தைகள் அதிஷ்டசாலிகள்.. காப்பகங்களில் குழந்தைகளுக்கு அத்தகைய… Continue Reading இந்து சமுதாயத்தில் குழந்தைகள் நடத்தப்படும் விதம்

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-25 சுவாமி பாஸ்கரானந்தர் வட மொழியில் கர்ம வாதம் என்று சொல்லப்படும் செயலும் அதன் விளைவும் என்பதை இந்து மதம் நம்புகிறது. கர்ம என்றால் செயல் என்று பொருள்.சில சமயங்களில் செயலின் விளைவையும் குறிக்கும்.இதன் படி நற்செயல்களினால் நன்மையும் தீய செயல்களினால் தீமையும் விளையும் என்பதே அறியப்படுவது. செயல்களினால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளுமே “கர்ம பலம்” என்று வடமொழியில் சொல்லப்படுகிறது.ஒருவன் செய்யும் நல்ல செயல்கள் அவனுக்கு மகிழ்ச்சியைத்… Continue Reading செயலின் கோட்பாடு- கர்மா தியரி-விதி

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-20 சுவாமி பாஸ்கரானந்தர் இந்தியப் பெண்ணைப் பொருத்த வரை இன்றும் கூட திருமணம் என்பது ஏமாற்றத்தை அளிப்பதாகவோ சுய விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலோ அமைவதில்லை. மாறாக அது அவர்கள் தன்னையே கணவனுக்காக அர்ப்பணித்துக் கொள்ளும் வேள்வியாக அமைகிறது. இன்றளவும் கூட இந்தியப் பெண்ணானவள் தன் கணவனை மணந்துகொண்டு அவனிடம் மட்டும் அன்பைக் காட்டுவதில்லை. திருமணம் செய்து கொள்வதன் மூலம் கணவனது குடும்பம் முழுவதையும் தத்தெடுத்துக்கொள்கிறாள். கணவனது குடும்பத்தினரின்… Continue Reading இந்தியப் பெண் – பசு புனிதமானதா?

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-23 சுவாமி பாஸ்கரானந்தர் ஈஸ்வரன் அல்லது சகுண பிரம்மம் உருவக்கடவுளும், அருவக்கடவுளும் எந்த வகையிலும் வேறுபாடுகள் கொண்டவை அல்ல. ஒரேக் கடவுளே எல்லையற்றதாக கருதும் போது நிர்குணப் பிரம்மமாகவும் , வரையறைக்குட்பட்டதாகக் கருதும் போது சகுணப் பிரம்மமாகவும் தெரிய வருகிறது. இந்து மதத்தில் உருவக்கடவுள் சகுணப்பிரம்மம் அல்லது ஈஸ்வரன் என்று சொல்லப்படுகிறது. இந்த உலகத்தில் வாழும் மனிதன் இடம் , காலம், காரணம் ஆகியவற்றினால் கட்டுப்பட்டவன். அவனது… Continue Reading ஈஸ்வரன் அல்லது சகுண பிரம்மம்

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-21 சுவாமி பாஸ்கரானந்தர் புனித நூல்களில் பரிந்துரைக்கப்பட்ட சரியான உணவு வகைகள்- சாறுள்ளதும் பசியைப் போக்க வல்லதும் முழுமையானதும் நமக்கு ஒத்துக் கொள்ளக் கூடியதுமான உணவு தான் உடலின் ஆரோக்கியத்திற்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் ஏற்றது என்று இந்துக்களின் புனித நூலான பகவத்கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதிகமான கசப்போடு கூடியவை ,காரமானவை,புளிப்பானவை,மிகவும் உவர்ப்பானவை,உஷ்ணமானவை, உலர்ந்தவை மற்றும் எளிதில் எரியக்கூடிய உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். மேலும் பழைமையானவை, ருசியற்றவை,தூய்மையற்றவை,மற்றும் அழுகியவை… Continue Reading புனித நூல்களில் பரிந்துரைக்கப்பட்ட சரியான உணவு வகைகள்

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-22 சுவாமி பாஸ்கரானந்தர் நிர்குணப் பிரம்மம் படைப்புத் தொழில் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது யார்? என்ற வினாவிற்கு படைப்பு கடவுள் அல்லது கடவுள் என்ற விடைதான் தர்க்க ரீதியாகக் கிடைக்கும். படைப்பிற்கு முன்னால் கடவுள் எப்படி இருந்தார்? என்று கேட்டோ மேயானால் மனிதனுடைய அனுபவ அறிவுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்தார் என்று இந்து மதம் பதிலளிக்கும். வெளி ,காலம், இடம் என்பவை இவ்வுலகுடன் தொடர்புடையவை. எனவே கடவுள்… Continue Reading நிர்குணப் பிரம்மம்

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-24 சுவாமி பாஸ்கரானந்தர் மதமானது சீர் குலைந்து அநீதிகள் தலைவிரித்து ஆடும் போது கடவுள் கருணைக் கொண்டு பூமியில் அவதரித்து அதர்மத்தை அழித்து நீதியை நிலைநாட்டி மதத்திற்குப் புத்துயிர்ச்சி அளிக்கிறார் என்பது இந்து மதக் கொள்கையாகும். அவ்வாறு தோன்றும் கடவுளை வட மொழியில் அவதாரம் என்றும் தமிழில் தெய்வம் மானுட உருவில் தோன்றுதல் என்றும் சொல்லப்படுகிறது. உலகம் தோன்றிய காலந்தொட்டே கடவுள் பல முறை மனித உருக்கொண்டு… Continue Reading தெய்வங்கள் மனித வடிவில் அவதரித்தல்