ராவணன் மிகச் சிறந்த சிவபக்தன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிறந்த சிவபக்தனான ராவணன், ராமன் கையால் மாண்டதற்கு அவன் செய்த சிவ அபராதமும் ஒரு முக்கியக் காரணமாகும் என்பர் ஆன்மிகச் சிந்தனையாளர்கள். ராவணன் சீதையைக் கவர்ந்து கொண்டு ஆகாய மார்க்கமாக விரைந்து சென்று கொண்டிருந்தான். அதை கழுகரசனான ஜடாயு பார்த்துவிட்டான். அவரும் தசரத மன்னனும் இணைபிரியா நண்பர்கள். ஆகவே ராவணனது விமானத்தை இடை மறித்தான் ஜடாயு. சீதையை… Continue Reading ராவணன் மிகச் சிறந்த சிவபக்தன்

உபநிடதங்கள்அல்லது உபநிஷத்துக்கள் (Upanaishads) பண்டைய இந்திய தத்துவ இலக்கியமாகும். இந்து சமயத்தினரின் ஆதார நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது. வேதங்களில் இவை இறுதியாக வந்தவையாகும் எனவே இவை வேதாந்தம் எனவும் கூறப்படுகின்றன. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில் பெரும்பாலும் யோகம், தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப் படுகிறது. பெரும்பாலும் குரு – சீடன் இடையே நடைபெறும் உரையாடலாக இவை அமைந்துள்ளன. இந்து சமய நூல்களில் இவை மிக உன்னதமான மதிப்பு பெற்றவை.… Continue Reading உபநிஷத்துக்கள்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு கோபுர உச்சியில் வெள்ளையம்மா நிற்க, அந்நியப்படைகள் அவளை நோக்கி வர, “ரங்கா! சேவை செய்ய பாக்கியம் அளித்த ரங்கநாதா! உன் திருவடியைச் சேர்கிறேன்‘ என கீழே குதித்து ரத்த வெள்ளத்தில் மிதந்தாள். யார் இவள்? ஸ்ரீரங்கம் கோயிலின் தேவதாசி. கடவுளின் சேவைக்காக வாழ்வை அர்ப்பணித்தவள். கோயிலை அந்நியர்கள் ஆக்கிரமித்திருந்த காலம் அது. அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடித்து, தங்களது நாட்டுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர்.… Continue Reading வெள்ளை கோபுரம்