July 6, 2019

Kural : 382

By priyesh Prakash

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு.

மு.வ உரை :

அஞ்சாமை ஈகை அறிவுடைமை ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.

கலைஞர் உரை :

துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்.

சாலமன் பாப்பையா உரை :

அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் – இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.

English Translation:

Kural : 382

Anjaamai Eekai Arivookkam Innaankum
Enjaamai Vendhark Kiyalpu

Explanation :
Never to fail in these four things fearlessness liberality wisdom and energy is the kingly character.