Kural : 414
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை.
மு.வ உரை :
நூல்களைக் கற்றவில்லையாயினும் கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும் அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.
கலைஞர் உரை :
நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை :
கல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்.
English Translation:
Kural : 414
Katrila Naayinung Ketka Aqdhoruvarku
Orkaththin Ootraan Thunai
Explanation :
Although a man be without learning let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity.