August 15, 2019

Kural : 421

By priyesh Prakash

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

மு.வ உரை :

அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும் அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

கலைஞர் உரை :

பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.

சாலமன் பாப்பையா உரை :

அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.

English Translation:

Kural : 421

Arivatrang Kaakkung Karuvi Seruvaarkkum
Ullazhikka Laakaa Aran

Explanation :
Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.